ஜல்லிக்கட்டை காண தமிழ்நாட்டுக்கு வாங்க… உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு திமுக அரசு பகிரங்க அழைப்பு!

ஜல்லிக்கட்டு தடை கோரி வழக்கு:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படும் காளைகள் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி பீட்டா தன்னார்வ அமைப்பு உசச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

அரசு தரப்பு வாதம்:
அரசியல் சாசன அமர்வின் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபிவ சிபல் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, ஜல்லிக்கட்டு என்பது உள்ளூரில் வளர்க்கப்படும் பல்வேறு காளை இனங்களின் வீரத்தை பறைசாற்று விதத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பொழுதுபோக்கிற்காக இப்போட்டிகள் நடத்தப்படுவதாக சொல்லப்படுவது தவறு. ஜல்லிக்கட்டின் ஒரு அம்சம் மட்டுமே பொழுதுபோக்கு என்று கபில் சிபல் எடுத்துரைத்தார்.

போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் என அனைவரும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி சான்று அளிக்கப்பட்ட பிறகே அவர்கள் போட்டியில் களமாட அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டே இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் துன்புறத்தப்படுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றும் கபில் சிபல் நீதிபதிகள் முன் கூறினார்.

நீதிபதிகளுக்கு அழைப்பு:
மேலும், இந்த வழக்கு விசாரணை முடிந்த பின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ல ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்று தமிழக அரசின் அழைப்பு விடுப்பதாகவும், அரசு தரப்பு வழக்கறிஞரான கபில் சிபல் நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவி்த்தார்.

மெரீனா புரட்சி:
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, இந்த போட்டிககு மீண்டும் அனுமதி அளிக்க கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2017 இல் மக்கள் போராட்டம் வெடித்தது.

மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், கோவை வ உசி மைதானம், திருச்சி, சேலம், திண்டுக்கல், நெல்லை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்போராட்டம் வெடித்தது.

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. எந்தவொரு அரசியல் கட்சியின் தலைமையில் இல்லாமல், பொதுமக்கள் தானாக திரண்டு நடத்திய இந்த சிறப்புமிக்க போராட்டம்
தைப் புரட்சி
,
மெரீனாப் புரட்சி
,
இளைஞர்கள் புரட்சி என்று இன்றளவும் பெருமையாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சர்வதேத அளவில் பெயர் பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.