தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி

பிக்பாஸ் வீட்டில் அடாவடியாக விளையாடி அதகளம் செய்து கொண்டிருக்கிறார் டிக் டாக் தனலெட்சுமி. இந்த சீசனில் தனலெட்சுமி பிக்பாஸ் வீட்டில் விளையாடுவதை வைத்து அவரை நெட்டிசன்கள் ஜூலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஏனெனில் இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் போது தங்களை சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், கேமராவையே பார்த்தது இல்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால், இருவருமே பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன் ஊடகம், டிக் டாக், குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் தான்.

பிக்பாஸ் வீட்டிலும் பொய் சொல்வது, கோல்மூட்டி விடுவது என ஜூலி கெட்டப்பெயரை சம்பாதித்தார். அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட்டில் தான் ரிப்பேர் ஆன பெயரை சரி செய்தார். இந்நிலையில், ஜூலி பிக்பாஸ் வீட்டில் என்னென்ன அழும்புகள் செய்தாரோ அதையே தான் வேறு ஸ்டைலில் செய்து வருகிறார் தனலெட்சுமி. எனவே தான் தனலெட்சுமியை பிக்பாஸ் சீசன் 6க்கான ஜூலி என கூறிவருகின்றனர்.

இதுகுறித்து ஜூலியிடம் கேட்ட போது, 'ஒருத்தரை பத்தி தெரியாம பேசக்கூடாது. நான் சாதாரண மனுஷி. ஒருத்தருக்கு நான் நல்லவங்களா தெரியலாம். மத்தவங்களுக்கு கெட்டவங்களா தெரியலாம். எல்லாருக்கும் நான் நல்லவள இருக்கணும்னு அவசியம் அல்ல. அதேசமயம் நான் கெட்டவன்னும் சொல்ல முடியாது. எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணி யார் என்ன சொன்னாலும் அவுங்க அவுங்க தான். நான் நான் தான். என்னைய பத்தி கமெண்ட் பன்றவங்கள நான் எப்படி நினைக்கிறேன்னா, நான் எப்போதுமே போஸ்ட்டா இருப்பேன். ஆனா அவுங்க கடைசி வர கமெண்ட் மட்டும் தான் பண்ணிட்டு இருப்பாங்க' என்று சொல்லி நெத்தியடியாக பதில் கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.