பஹ்ரைச், உத்தர பிரதேச நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் மீது லாரி மோதியதில், ஆறு பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ – பஹ்ரைச் நெடுஞ்சாலையில், பஸ் மீது எதிரே வந்த லாரி நேற்று மோதியது. இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆபத்தான நிலையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குப்பின் லாரியை நிறுத்தாமல் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களுக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement