பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசல்..! முதல் நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை

ராவல்பிண்டி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சென்று 20 ஓவர் தொடரில் விளையாடியது. அதன் பிறகு தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி – பென் டக்கட் ஆகியோர் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினர். இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டினர். பாகிஸ்தான் பந்துவீச்சளர்களை துவம்சம் செய்து ,தொடர்ந்து அதிரடி காட்டிய இவர்கள் தொடக்க விக்கெட்டுக்கு233 ரன்கள் சேர்த்து , ஜாக் கிராவ்லி , பென் டக்கட் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

ஜாக் கிராவ்லி 122 ரன்களிலும் , பென் டக்கட் 107 ரன்களிலும் வெளியேறினர் .பின்னர் வந்த ஒல்லி போப். ஜோ ரூட் அதிரடியை தொடர்ந்தனர் . சிறப்பாக விளையாடிய போப் சதம் அடித்து அசத்தினார் .பின்னர் போப் 108 ரன்களிலும் ஆட்ட்டமிழந்தார்

விக்கெட்டுகள் இழந்தாலும் இங்கிலாந்து அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய ஹார்ரி புரூக் ருத்ரதாண்டவம் ஆடினார்.குறிப்பாக சவுத் ஷகீல் வீசிய ஓவரில் 6 பவுண்டரிகள் பறக்க விட்டார் . ஹாரி புரூக் 80 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார்

இறுதியில் முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் 500 ரன்களை கடந்த முதல் அணியாக இங்கிலாந்து அணி உள்ளது.

புரூக் 101, ஸ்டோக்ஸ் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இதுவரை எந்த அணியும் 500 ரன்களை எடுத்ததில்லை. இதனால் 112 வருட சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. அதேபோல முதல் நாளில் எந்த அணி வீரர்களும் நான்கு சதங்கள் அடித்ததில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.