வடிவேலு தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்து முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் களமிறங்குகிறார் வடிவேலு. அந்தவகையில், தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வடிவேலுவிடமிருந்து வாங்கிய சுராஜ் வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு பாடியிருந்தார்.
We are fansu to his voice #Appatha #Panakkaran #NaaiSekarReturns@Music_Santhosh
Lyrics by @Lyricist_VivekVaigai Puyal #Vadivelu @Director_Suraaj @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran pic.twitter.com/sTts7guIui
— Think Music (@thinkmusicindia) December 1, 2022
அதேபோல் சமீபத்தில் படத்தின் இரண்டாவது பாடலான பணக்காரன் பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பியது. படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Presenting the TRAILER of #NaaiSekarReturns
Witness the comic tale of India’s 1st DOG Kidnapper at the #NaaiSekarReturnsOnDec9
Vaigai Puyal #Vadivelu @Director_Suraaj @Music_Santhosh @thinkmusicindia pic.twitter.com/NW7PL3njGY— Lyca Productions (@LycaProductions) December 1, 2022
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெயலரில் வழக்கம்போல் வடிவேலு காமெடியில் சுழன்று அடிக்கிறார்.படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது ட்ரெய்லர். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதனை தற்போது அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.