FIFA உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி: மனமுடைந்த ஈரான் வீரரை கட்டியணைத்து தேற்றிய அமெரிக்க வீரர்


FIFA உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுவதால் மனமுடைந்து கண்கலங்கிய ஈரானிய வீரரை அமெரிக்க வீரர் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கத்தாரில் புதன்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை ஆட்டத்தில் ஈரான் அணியை அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதனால் ஈரானின் FIFA உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.

ஆனால், ஆட்டத்தின் முடிவில் அமெரிக்க வீரர் செய்த செயல் ரசிகர்களின் இதயங்களை வென்றது.

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதை தாங்கிக்கொள்ளமுடியாத ஈரானிய வீரர் ரமின் ரெசையன் (Ramin Rezaian) மனமுடைந்து கண்கலங்கினார்.

Qatar FIFA World Cup 2022 Iran FootballGetty Images

மற்ற அமெரிக்க அணியினர் மைதானத்தில் சுற்றி வரும்போது, ரெசையன் அழுவதைக் கண்ட அன்டோனி ராபின்சன் (Antonee Robinson) அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து வெகுநேரமாக ஆறுதல் தெரிவித்தார்.

இந்த உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. அன்டோனி ராபின்சனின் செயலை பாராட்டிவருகின்றனர்.

இதனிடையே, எதிரணியான அமெரிக்காவின் வெற்றியை ஈரானிய மக்களே கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஈரானின் Sanandaj நகரத்தில் அமெரிக்கா அடித்த ஒற்றை கோலை ஆரவாரத்துடன் ஆடிப்பாடி கொண்டாடியதாக இணையத்தில் சில ஆதாரங்கள் காட்டுகின்றன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.