அதிகரிக்கப்படும் மின் கட்டணம்: இலங்கை மின்சார சபை அதிரடி அறிவிப்பு


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதி இல்லாவிட்டாலும் கூட மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது சாத்தியம் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபை, மேற்படி விலையேற்றத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு  சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.

மின் கட்டணங்கள் அதிகரிப்பு 

அதிகரிக்கப்படும் மின் கட்டணம்: இலங்கை மின்சார சபை அதிரடி அறிவிப்பு | Electricity Price Hike 2023

இதன்படி, மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்று (டிசம்பர் 01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, அமைச்சரவையின் தீர்மானங்கள் மின்சார சட்டத்திற்கு அமைவாக அமையுமாயின் ஆணைக்குழுவிற்கு அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.

அமைச்சரவை 

அதிகரிக்கப்படும் மின் கட்டணம்: இலங்கை மின்சார சபை அதிரடி அறிவிப்பு | Electricity Price Hike 2023

அண்மைய கட்டண அதிகரிப்பு இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று இலங்கை மின்சார சபை கூறியதை அடுத்து.

அதன்படி, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு படிகளின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.