ஐபிஎல்லில் ஓய்வு அறிவித்த டுவைன் பிராவோ! ஆனாலும் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீர ர் டுவைன் பிராவோவை விடுவித்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார்.

இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு கவலை அளித்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் பிராவோ, கேட்ச் பிடித்தவுடன் நடனமாடுவதை ரசிகர்கள் கொண்டுவர்.

டுவைன் பிராவோ/Dwayne bravo


பிராவோவின் பதிவு

இந்த நிலையில், ஓய்வு பெற்றாலும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்து பிராவோ வெளியிட்ட பதிவில்,

‘கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். இது எனக்கும், எனது குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள் என்பதை நான் அறிவேன்.

ஆனால், பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்த அனைத்து ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி’ எனதெரிவித்துள்ளார்.

டுவைன் பிராவோ/Dwayne bravo

@CSK/Twitter

39 வயதாகும் டுவைன் பிராவோ, 161 போட்டிகளில் விளையாடி 4359 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.