கதை நாயகனாக சார்லி நடிக்கும் படம்

அரபி புரொடக்ஷன் சார்பில் ரஜீப் சுப்பிரமணியம் மற்றும் வினயன் வெண்டர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் 'பைண்டர்'. வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். கதையின் நாயகனாக சார்லி நடிக்கிறார். செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை தாரணி மற்றும் நடிகை பிரானா உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு செய்கிறார், சூர்ய பிரசாத் இசை அமைக்கிறார்.

படம்குறித்து இயக்குனர் வினோத் ராஜேந்திரன் கூறியதாவது: அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய கதை.

அமெரிக்காவில் நடப்பதை தமிழ்நாட்டில் நடப்பது போன்று மாற்றி உருவாகும் படம். படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கி உள்ளோம். சென்னை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.