நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய உறுப்பினரான ருச்சிரா காம்போஜ் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் தழைத்தோங்கி 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது.எப்போதும் ஜனநாயகத்தை பேணிக்காத்து வந்துள்ளோம். ஜனநாயக தூண்கள் வலுவாக உள்ளது. சமூகவலை தளங்கள் மிக சுதந்திரமாக உள்ளது. யாருக்கும் எந்த கருத்தும் தெரிவிக்க உரிமை உள்ளது. இதனால் இந்தியா முன்னேறி வருகிறது. ஜனநாயக திருவிழா கொண்டாடுகிறோம். இந்தியாவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் நடத்த தேவையில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement