100% சுகப் பிரசவம் சாத்தியமா? அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பேசுகிறாரா அமைச்சர்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் பொதுவெளியில் கவனக் குறைவாக கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தில் பொதுசெயலளார் இரவீந்திரநாத் கூறியுள்ளார்.

மகப்பேறில் 100% சுகப் பிரசவம் என்ற இலக்கை அடையும் நோக்கோடு மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்ற அமைச்சர் மா சுப்பிரமணியனின் பேச்சு மருத்துவர்களுக்கு கூடுதல் அழுத்ததையும் அளிக்கும் என்பதால் அத்தகைய கருத்துகளை பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை பத்திரிக்கையாளர்கள் மன்ற்த்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தில் பொதுசெயலளார் இரவீந்திரநாத் கூறும் போது, அண்மையில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அறுவை சிகிச்சை இல்லாத சுகப்பிரசவத்தை 100% உயர்த்த வேண்டும். அதை இலக்காக கொண்டு மருத்துவர்கள் செயல்பட வேண்டுமென பேசியிருந்தாக குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த கருத்து அறிவியலுக்கு புறம்பானது என்றும் இத்தகைய கருத்து மருத்துவர்களுக்கு கூடுதல் அழுத்தையும், தாய் சேய் இறப்பு விகிதத்தை அதிகரிக்க செய்யும் என தெரிவித்தார்.

எனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் பொதுவெளியில் இது போன்ற கவனக் குறைவாக கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதுமட்டுமல்லாமல் உடல் உழைப்பு இல்லாத நிலை, யோகா செய்யாமல் இருப்பதன் காரணமாக தான் இன்று சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறும் கருத்துகள் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு தனமான கருத்துகளாக இருப்பதாகவும் இது பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கும் என தெரிவித்தார்.

மனிதனின் இடுப்பு எழும்புகள் பரிணாம வளர்ச்சியால் குறுகியதால் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்திருப்பதை அமைச்சர் புரிந்து கொண்டு கருத்துகளை வெளியிட வேண்டுமென வலியுறுத்தினார்.

சுகாதார துறையில் உள்ள காலிப்பணியிடங்களை மத்திய அரசின் அழுத்தம் மூலம் நிரப்பாமல் தமிழக அரசே தானாக முடிவெடுத்து நிரப்ப வேண்டுமெனவும் மருத்துவர் இரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.