கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருந்த பொருட்கள்! அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பெண்


சீனாவில் கர்ப்பிணி போல் நடித்து கணினி சிப்கள் மற்றும் மொபைல் போன்களை கடத்திய பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரத்தின் எல்லையை கடக்க முயன்ற அப்பெண், பார்க்க கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணி போல் பாரிய வயிற்றுடன் காணப்பட்டுள்ளார்.

சோதனை

வழக்கமான எல்லை சோதனையின்போது, சுங்க அதிகாரிகளில் ஒருவர் அப்பெண்ணை விசாரித்தபோது, அவர் 6 மாத கர்ப்பம் என தெரிவித்துள்ளார்.

இதனால் சற்று சந்தேகமடைந்த அதிகாரிகள், அப்பெண்ணை முழுமையாக சோதனை செய்துள்ளார். அப்போது, அப்பெண் கர்ப்பமாக இல்லை என்பதும், போலியான ரப்பர் வயிற்றை இடையுடன் பொறுத்தி அதற்குள், 202 கணினி சிப்கள் மற்றும் 9 ஸ்மார்ட்போன்களை கடத்தியதும் வெட்டவெளிச்சமானது.

கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருந்த பொருட்கள்! அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பெண் | Chinese Woman Fake Pregnancy Bump Computer ChipsMaharashtraTimes

பின்னர் கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணை கைது செய்தனர்.

சீனாவில் நூற்றுக்கணக்கான இடைத்தரகர்களைக் கொண்ட ஒரு பெரிய சாம்பல் சந்தையை இருப்பதாக கூறப்படுகிறது. சாம்பல் சந்தையில்;ஏராளமான விலையுயர்ந்த கணினி சிப்கள் மற்றும் மொபைல் போன்கள் கடத்தப்பட்டு பலநூறு மடங்கு விலையில் விற்கப்படுகிறது.


 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.