டெல்லி கலவர வழக்கு; 2 ஆண்டுகளுக்கு பின் உமர் காலித் விடுதலை.!

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தார். அப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 600 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தக் கலவரத்தை தூண்டிவிட்டதாகக் கூறி, ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை போலீஸார் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், “டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் 2020 ஜனவரி 8ம் தேதி உமர் காலித் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவிடுவது பற்றி உமர் காலித் ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும், இதே காலகட்டத்தில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சிஏஏ போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

அங்கும் போராட்டக்காரர்களை கலவரம் செய்ய தூண்டும் விதமாகவும் வெறுப்புணர்வூட்டும் வகையிலும் உமர் காலித் பேசியுள்ளார். அவரது பயண மற்றும் தங்கும் செலவுகளை அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களே கவனித்து வந்துள்ளனர்” என கூறப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருகையின்போது, டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டி விட்டு, இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது போன்ற ஒரு காட்சியை உலகளவில் பரப்ப வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டதாகவும் போலீசார் கூறினர்.

இதையடுத்து உமர்காலித் மற்றும் அவரோடு கைது செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக ஜாமின் மறுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் உமர் காலித் மற்றும் வெறுப்புக்கு எதிரான ஒற்றுமை அமைப்பின் உறுப்பினர் காலித் சைஃபி ஆகியோரை டெல்லி கலவர வழக்கில் இருந்து நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தூக்கத்தை கெடுத்த சேவல் மீது பரபரப்பு புகார்.. நடவடிக்கை எடுத்த போலீஸ்..!

இதையடுத்து அவர்கள் விரைவில் நீதிமன்ற காவலில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அல்லாவின் கருணை மற்றும் ஜனநாயகவாதிகளின் அன்பினால் தனது மகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிக்கான இந்த போராட்டம் மிகவும் கடினமாக இருந்தாக உமர்காலித்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.