பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்… பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி


பிரித்தானியாவில் வேகமாக பரவும் கொடிய பாக்டீரியாவுக்கு இதுவரை 6 சிறார்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துவக்கப் பள்ளி சிறார்களில் பாக்டீரியா பாதிப்பு

சதை உண்ணும் அந்த கொடிய பாக்டீரியாவுக்கு Strep A என பெயரிட்டுள்ளனர். பிரித்தானியா முழுமையும் துவக்கப் பள்ளி சிறார்களில் குறித்த பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 6 மரணங்கள் இந்த பாக்டீரியா தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்... பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி | Uk Child Dies From Wildfire Bacteria

Image: Just Giving

சர்ரே மற்றும் வேல்ஸில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் வைகோம்பில் உள்ள ஒரு குடும்பம் அவர்களின் நான்கு வயது மகன் முகமது இப்ராஹிம் அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தகவலை பதிவு செய்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பான UKHSA இந்த விவகாரம் தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், இதுவரை 6 பேர் Strep A பாக்டீரியா பாதிப்பால் இறந்துள்ளதையும் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை 6 சிறார்கள் பலி

சர்ரே பகுதியில் 6 வயது சிறுவன், குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வேல்ஸ் பகுதியில், விக்டோரியா துவக்கப் பள்ளியில் சிறார் ஒருவர் குறித்த கொடிய பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்... பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி | Uk Child Dies From Wildfire Bacteria

Image: Google Streetview

மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு எப்போது சிகிச்சை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

நான்கு அல்லது ஐந்து நாட்களாக காய்ச்சல் விடாமல் நீடித்தால், அல்லது வேகமாக மூச்சு வாங்கினால் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது இந்த கொடிய வியாதி சிறார்களில் பரவலாக காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ள மருத்துவர் ஒருவர், இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொற்றின் தீவிரம் 670% அதிகரிப்பு

பிரித்தானியா முழுக்க இதுவரை 861 சிறார்கள் குறித்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இந்த தொற்றின் தீவிரம் 670% அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

லிவர்பூலில் உள்ள மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி ஒருவர் நோய் தொற்றுக்கு ஆளாகி வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
10 வயதுக்கு உட்பட்ட மேலும் இரு சிறார்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இந்த 7 நாட்களில் இறந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் குறித்த வியாதி காரணமாக இறந்தார்களா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.