வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: 6 மாதங்களுக்கான சர்வதேச விலை தரவு படி, கச்சா எண்ணெய் – 25% மலிவாக உள்ளது. ஆனால் இன்னும் பெட்ரோல், டீசல் கேஸ் சிலிண்டர் விலை ஏன் குறையவில்லை? என காங்., எம்.பி ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்., எம்.பி ராகுல் கடந்த செப்.,7 ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கி உள்ளார். விலைவாசி உயர்வை எதிர்த்து ராகுல் மேற்கொண்டு வரும் யாத்திரையை தற்போது மத்தியப் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகிறார்.
காங்., எம்.பி ராகுல் யாத்திரை 87வது நாளான இன்று(டிச.,03) மத்தியப் பிரதேசத்தில் 11 வது நாளாக நடைப்பயணம் மத்திய பிரதேசம் அகர் மால்வா மாவட்டத்தில் கம்ப்யூட்டர் பாபாவும் இணைந்து மேற்கொண்டார்.

நடைப்பயணத்தின்போது, ராகுல் மற்றும் திக் விஜய் சிங்குடன் சில நிமிடங்கள் பேசியபடி நடந்து வந்தார் கம்ப்யூட்டர் பாபா. நேற்று உஜ்ஜைனியில் இருந்து அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள அகர் சவானி சதுக்கத்தில் யாத்திரையை காங்., எம்.பி ராகுல் மேற்கொண்டார்.
இந்நிலையில் விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் அவலத்திற்கு காரணமான, பா.ஜ., அரசின் மோசமான மற்றும் பயனற்ற கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்ப நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

* கச்சா எண்ணெய் – 25% மலிவாக உள்ளது.
* எல்பிஜி (LPG) – 40% மலிவாக உள்ளது.
இவை 6 மாதங்களுக்கான சர்வதேச விலை தரவு.
* ஆனால் இன்னும் பெட்ரோல், டீசல் கேஸ் சிலிண்டர் விலை ஏன் குறையவில்லை?. பிரதமரே, உங்கள் கொள்ளை முறைக்கு எதிராக ஜனநாயகத்தின் குரல் ஒலிக்கிறது. இதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள். இவ்வாறு காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement