
மெக்காவில் ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது பதான் மற்றும் ஜவான் படங்களில் நடித்துள்ளார். சவுதி அரேபியா சென்றுள்ள இவர் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு உம்ரா சென்றார். பொதுவாகவே ஷாருக்கான் சவுதி அரேபியா செல்லும்போதெல்லாம் உம்ரா செல்வது வழக்கம். கொரோனா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் உம்ரா செல்வதால் அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளை உடை அணிந்து அவர் உம்ரா செய்யும் படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவியது.