வட கிழக்கின் விவசாயத்தின் மூலம், நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை தீர்க்க வாய்ப்பு

எமது மக்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளில் , காணிப்பிரச்சனையும் பிரதானமானது என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

 பாராளுமன்னறத்தில் நேற்று(02) வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்களுக்கு ,2023 வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை தவிர்க்க இலங்கையின் 30% நிலப்பரப்பை கொண்ட வட கிழக்கின் விவசாயத்தின் மூலம், உணவு உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை தீர்க்க வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் ஒரு சில தரப்பினருடைய அசமந்த போக்கினால் மாவட்ட, மாகாண, அல்லது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது.

யுத்தம் நடந்த பகுதியாக இருந்தாலும் அழிக்கப்படாத காடுகள் வடக்கில் இன்றும் உள்ளன. அவற்றை பாதுகாப்பதை விட இப்போது மக்களுடைய காணிகளை காடுகளாக மாற்றி காணி பிடிப்பதுதான் இடம்பெறுகிறது.

இவற்றை தீர்க்க நாம் ஆராய்ந்த பொழுது,Google Map / GPS  முறையில் காணிகளை அடையாளப்படுத்துவதே தவறு ஏற்பட காரணமென பல கூட்டங்களில் உணரப்பட்டது.

கடந்த காலங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மணலாற்றில் நடந்ததை போன்று தற்போதைய வனப்பாதுகாப்பு ரீதியான காணி அபகரிப்புகள் மீதும் மக்களுக்கு அச்சம் உள்ளது. அவை விடுவிக்கப்படும் என காலத்துக்கு காலம் மாறும் அத்தனை அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் சொல்லிக் கொண்டாலும் முழுமையாக தீரவில்லை.

கடந்த காலங்களில் அமைச்சர்கள்இ அதிகாரிகள் நேரடியாக யாழ் மாவட்டத்துக்கு வருகைதந்த போதும்இ இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டும், இன்னும் தீர்வுகள் இல்லை. அவற்றை செயற்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அசமந்த போக்கே இதற்கு காரணமாகும்.

கடந்த ஆண்டு நீதிக்கான அணுகல் சந்திப்பின்போதும் எமது வலிவடக்கு, மருதங்கேணி, நெடுந்தீவு, முல்லைத்தீவு பிரதேச செயலாளர்களால் இவ்விடயத்தின் அவசியம் கூறப்பட்டது. துறை சார்ந்த அமைச்சர்களும்இ அதிகாரிகளும் அதனை ஏற்று, அதற்கான நிவர்த்தியை செய்ய கால அவகாசம் கோரியும் அரசியல் குழப்ப நிலை அதை மேலும் நீடித்துள்ளது என்றார்.

வலி வடக்கு பிரதேச மக்களின் வாழ்வியல் நிலங்களும், விவசாய நிலங்களும் விடுவிக்கப்படாத நிலை இன்னமும் தொடர்கிறது. யாழ்.மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து , 822 ஏக்கர் காணி பல கட்டங்களில் விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் 3ஆயிரத்து 27 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது.

பலாலி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அரசாங்கம்இ பிரதேச மக்களின் காணிகளை சுவீகரித்தது. அதியுயர் பாதுகாப்பு வலயமாக இந்த காணிகளை அரசாங்கம் தன்வசம் வைத்துள்ளது.
794 பொதுமக்களுக்கு சொந்தமான 262 ஹெக்டயர் காணிகள் (397 காணித்துண்டுகள்) இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்களின் விபரங்கள்இ அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் என்பன மாவட்ட செயலகத்தால் பெறப்பட்டு, அவை இணையத்தில் உள்ளன.அந்த மக்களுக்கான ந ஷ்டஈடுகள் /பதில் காணிகளை துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அதிக பயணிகளை கொண்ட விமானங்களை தரையிறக்க தேவையான ஓடுபாதை விஸ்தரிக்க மேலும் காணிகள் தேவைப்படுகிறது. ஆனால் கடந்தகால ந ஷ்டஈடுகள் இன்னமும் கொடுக்கப்படாமையால் மக்கள் மத்தியில் அதற்குரிய வரவேற்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

இவைதவிர, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் யாழ்ப்பாணத்தில், மருதங்கேணி, நாகர்கோவில், பருத்தி தீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் விடுவிக்க வேண்டியுள்ளது.

கடந்த 2015இல் நெடுந்தீவு தேசிய பூங்கா பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் தற்போது தீவின் மூன்றில் ஒரு பகுதி அந்த வலயத்துக்குள் அகப்பட்டுள்ளது. பல குடும்பங்களின் விவசாய மற்றும் தனியார் நிலங்கள் இதற்குள் அடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் தீர்வு கிடைக்க வேண்டும்.

இவற்றோடு வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்டுள்ள நிலங்களும் எங்கள் மக்களை விசனமடைய வைத்துள்ளது.

மணற்காடு சவுக்கம் தோப்பில் 702 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதற்குள் 8 தனியார் காணி, 10 பொது நிறுவனங்கள், 2 மீன்பிடி பகுதிகள் போன்றன அகப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக முன்னாள் காணி அமைச்சர் நேரில் வந்து மக்களை சந்தித்து தீர்வு காண்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் தீர்வுகள் இல்லை.

அதேபோன்று 2019இல் சாவகச்சேரி சந்திரபுரத்திலும், சரசாலையிலும் கையப்படுத்தப்பட்ட காணிகளில் சந்திரபுரத்தில் 101.8 ஏக்கர் காணியும்,, சரசாலையில் 86 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட வேண்டும்
இவற்றுள் வீடுகள், ஆலயங்கள், மயானம், மேய்ச்சல் நிலம், விவசாய நிலம் போன்றன உள்ளடங்கியுள்ளன.

இப்படியாக தீர்க்கப்பட வேண்டிய காணி சார்ந்த பிரச்சனைகள் விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். பல அமைச்சர்கள்இ ஆளுநர்கள்இ அதிகாரிகள் மாறி மாறி வந்தும் தீராத பிரச்சனைகளாக இவை உள்ளன. ஜனாதிபதி அவர்கள் அண்மையில் வவுனியாவுக்கு வந்திருந்தபோது தெரிவித்த கருத்துகள் நம்பிக்கை தருகின்றன. அவை அதிகாரிகள் மட்டத்திலும் விரைவுபடுத்தப்பட வேண்டும். எங்கள் மக்களின் காணிப்பிரச்சனைக்கு உரிய தீர்வு உடனடியாக எட்டப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

 கடந்த காலங்களில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கம் சுற்றுலா வருமானத்தை மேம்படுத்தஇ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிஇ குறித்த படகு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

இலங்கையில் பல பகுதிகளில் சுற்றுலா விடுதிகள் உள்ளன. உதாரணமாகஇ பென்தோட்டஇ பாசிகுடா மற்றும் யால பகுதிகளை குறிப்பிடலாம். கற்பிட்டியில் இத்தகைய விடுதியொன்று அமைக்கப்பட உள்ளது. ஆகவே வடமாகாண சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள உல்லாச விடுதிகளைப் போன்று சுற்றுலா விடுதிகளை அமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

ராமர் சேது பாலத்தை பார்வையிடுவதற்காக இந்திய அரசு ராமேஸ்வரத்தில் ஒரு கோபுரத்தை கட்டியுள்ளது. அது ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்துவரும் ஒரு சுற்றுலாத்தலமாக மாறுகிறது. இந்த ராமர் சேது பாலத்தின் மறுமுனை தலைமன்னாரில் உள்ளது. ராமர் – சேது பாலத்தை மட்டுமின்றி தென்னிந்தியாவின் தென் முனையையும் பார்வையிடுவதற்கு தலைமன்னாரில் ஒரு கோபுரம் தேவையாகும். இது இலங்கையின் உள்நாட்டு சுற்றுலாவை பெரிதளவில் மேம்படுத்தும்.

இலங்கையைச் சுற்றியுள்ள தீவுகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன.
வடமாகாணத்தை பொறுத்தவரையில் குறிகட்டுவான் படகு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். இதனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தினால்இ அருகிலுள்ள தீவுகளுக்கு படகு சேவைகளை இயக்க தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள். அவுஸ்திரேலியாவில் உள்ள படகுத் துறைமுகங்களைப் போல குறிகட்டுவான் படகுத்துறைமுகமும் சுற்றுலாபயணிகளின் வரவேற்பை பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.