ஹன்சிகாவுக்கு கல்யாணம்.. களை கட்டியது ஜெய்ப்பூர் அரண்மனை..!

தமிழில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அத்துடன், பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை (டிச.4-ம் தேதி) நடக்க உள்ளது. இதனையொட்டி, கடந்த 3 நாட்களாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக களைகட்டி வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசைக் கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.