ஹோட்டலில் உணவு உட்கொள்ள சென்றவரின் வியக்க வைக்கும் செயல் – கண்ணீர் விட்டழுத நபர்


புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மறந்து வைக்கப்பட்ட 35 லட்சம் ரூபா பணப் பையொன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பணப்பையை மறந்துவிட்டு சென்ற நபர்

ஹலவத்தை, இரணைவில பகுதியைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி காலை தனது மீன்பிடி படகுகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீர்கொழும்புக்கு வந்த போது வென்னப்புவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது பணப்பையை மறந்துவிட்டு காலை உணவை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு வந்த ஒருவர் பணப் பை கிடந்த இடத்தில் காலை உணவு சாப்பிட அமர்ந்தார். பின்னர், சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது, ​​ஹேட்டல் ஊழியர்கள், பையை அந்த நபருடையது என நினைத்து, அவரிடம் கொடுத்துள்ளனர்.

ஹோட்டலில் உணவு உட்கொள்ள சென்றவரின் வியக்க வைக்கும் செயல் - கண்ணீர் விட்டழுத நபர் | Sri Lankan Humanity

அதை திறந்து பார்த்தபோது அதிக அளவில் பணம் இருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மீன்பிடி படகு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ருமேனியா செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட பணம்

அன்றைய தினம் ருமேனியா செல்வதற்கு அந்த பணத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதனை மறந்து விட்டு சென்றதாகும் மீன்பிடி படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தனது காணியை அடகு வைத்து இந்த பணத்தை ஏற்பாடு செய்ததாகவும், அதனை தன்னிடம் ஒப்படைத்த நபரிடம் படகு உரிமையாளர் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்கான பொலிஸார் அந்த நபரை பாராட்டியுள்ளளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.