சென்னை: அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். எல்லா சட்ட மசோதாக்களுக்கும் உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
