இந்தியா மற்றும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள கடல் பயணம்


வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் படகு சேவைகளை மீண்டும்
ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள்
கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான
சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள கடல் பயணம் | Sea Voyage Commenced Between India And Jaffna

விமான சேவைகள்

சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனை
உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி சென்னையில் இருந்து வாரத்திற்கு ஐந்து விமான சேவைகள் கோரப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் உள்ள கண்டி, நுவரெலியா போன்று வேறு இடங்களுக்கு கொண்டு
செல்வதற்கு சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு உதவவும், கடற்கரை
விருந்தகங்களில் அவர்களது திருமண விழாக்களை நடத்தவும் ஏற்பாடுகள்
செய்துக் கொடுக்கப்படவுள்ளது.

இந்தியா மற்றும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள கடல் பயணம் | Sea Voyage Commenced Between India And Jaffna

இதன்மூலம் அதிகளவான பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள். மற்றொரு பகுதியினர் சூதாட்ட விடுதிகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள்.

சுற்றுலா துறை மேம்பாடு

இதேவேளை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்திற்கு
வாரத்திற்கு மூன்று முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விமானக் கட்டணங்கள் குறித்து முடிவெடுப்பது குறித்து எதிர்வரும்
வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்தியா மற்றும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள கடல் பயணம் | Sea Voyage Commenced Between India And Jaffna

இதற்கிடையில் யாழ்ப்பாணம் மற்றும் பிற நகரங்களுக்கு இடையே சுற்றுலாப்பயணிகள்
விரைவாக செல்லும் வகையில், உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும்
ஆலோசிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில்
குடிவரவு மற்றும் சுங்கப் பிரிவுகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.