
இன்னொரு சிவா மனசுல சக்தி: வரலாறு முக்கியம் படம் குறித்து ஜீவா பேச்சு
ஜிப்ஸி, 83 படங்களுக்கு பிறகு ஜீவா நடிப்பில் திரைக்கு வரும் படம் வரலாறு முக்கியம். சந்தோஷ் ராஜன் இயக்கி உள்ள இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி நாயகியாக நடிக்க, வி.டி.வி. கணேஷ், கே .எஸ். ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஜீவா பேசுகையில், ஏற்கனவே நான் நடித்த சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை படங்களை போன்று ஜாலியான காமெடி படங்களில் நடிக்குமாறு பலரும் கேட்டுக் கொண்டு வந்த நேரத்தில்தான் வரலாறு முக்கியம் படத்தின் கதையை கேட்டேன்.
காமெடி கலந்த ஒரு நல்ல ஜாலியான கதையாக இருந்தது. அதனால் உடனே கால்சீட் கொடுத்தேன். தமிழக ரசிகர்கள் நல்ல காமெடி படங்களை கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு சமீபத்தில் திரைக்கு வந்த லவ் டுடே படம் ஒரு நல்ல உதாரணம். அந்த படத்தைப் போலவே இந்த வரலாறு முக்கியம் படமும் நகைச்சுவை கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதற்கு முன்பு நான் நடித்த சிவா மனசுல சக்தி படம் போன்று இந்த படமும் இருக்கும் என்றார் ஜீவா.