ஏழுமலையான் தரிசனம் காத்திருப்பு நேரம் குறைந்தது| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று மூன்று மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தர்ம தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 64 ஆயிரத்து 586 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 27 ஆயிரத்து 501 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் சீனிவாசம் கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அலிபிரி நடைபாதையில் காலை 3:00 – இரவு 10:00 மணி வரையிலும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6:00 – மாலை 6:00 மணி வரையிலும் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நடைபாதையில் செல்பவர்களுக்கான திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் நடைமுறை இதுவரை துவங்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.