கத்தார் உலகக் கோப்பை… செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர்பில் இன்று நடந்த இரண்டாவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து, செனகல் அணிகள்

இதனால் காலிறுதி ஆட்டத்தில் சீற்றம் கொண்ட பிரான்ஸ் அணியை இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கிறது.
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

கத்தார் உலகக் கோப்பை... செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து | Rampant Three Lions Face Fearsome France

@alamy

இன்று நடந்த இரண்டாவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் அணியின் தலைவர் ஹரி கேன் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.

கத்தார் உலகக் கோப்பை... செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து | Rampant Three Lions Face Fearsome France

@PA

இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நாக் அவுட் வெற்றி

இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.

கத்தார் உலகக் கோப்பை... செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து | Rampant Three Lions Face Fearsome France

@getty

செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியவில்லை. மட்டுமின்றி 2002 க்கு பின்னர் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நாக் அவுட் வெற்றி இதுவெனவும் கூறப்படுகிறது. 

கத்தார் உலகக் கோப்பை... செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து | Rampant Three Lions Face Fearsome France

@getty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.