திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் அருகே வீரானந்தல் என்ற கிராமத்தில் 37 வயதான பரிமளா என்பவருக்கு 20 வயதில் ரோகினி என்ற பெண்ணும், 17 வயதில் ராஜேஸ்வரி என்ற பெண்ணும் இருக்கின்றனர்.
மேலும், 15 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் பரிமளாவுடைய கணவர் இறந்துவிட்டார். அதன் பின் பரிமளாவிற்கு காமராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பரிமளாவின் பழக்கம் குறித்து குழந்தைகளுக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
ஆனால், பரிமளா அதைக் கேட்காததால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிள்ளைகள் பரிமளாவிடம் பேசுவதை தவிர்த்து விட்டனர். இதனால், மன உளைச்சலில் இருந்த பரிமளா காமராசிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இன்று தன்னுடைய இரண்டாவது மகள் ராஜேஸ்வரி அழைத்துக்கொண்டு வனப்பகுதியில் உள்ள காத்தவராயன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த காமராஜ் வாக்குவாதம் செய்து தன்னிடம் இருந்த அரிவாளால் பரிமளாவை வெட்டியுள்ளார். தடுக்கச் சென்ற ராஜேஸ்வரிக்கும் வெட்டு விழுந்துள்ளது. மகள் தாய் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருவரையும் வெட்டி கொன்று விட்டு காவல் நிலையத்திற்கு சென்று காமராஜ் தானாகவே சரணடைந்துள்ளார்.