காமாட்சிபுரி ஆதீனம் கொடுத்த பரிசு… ஓபிஎஸ் செம ஹேப்பி… இனிமே தான் ஆட்டமே இருக்கு!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் உலக சமாதான பெருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு உலக சமாதான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரியில் 51 சக்தி பீடக் கோவில் அமைந்துள்ளது.

காமாட்சிபுரி ஆதின பெருவிழா

இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இருக்கிறார். இந்த கோயிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20ஆம் ஆண்டு உலக சமாதான பெருவிழா இன்று (டிசம்பர் 4) நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். முன்னதாக சாமி தரிசனம் செய்து கோயிலை சுற்றி வந்தார். பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதீனத்தை வாழ்த்தி பேசினார்.

ஓபிஎஸ் நீண்ட நாள் விருப்பம்

அப்போது பேசுகையில், நான் இந்த கோவிலுக்கு வர விரும்புவதாக காமாட்சிபுரி ஆதீனத்திடம் பலமுறை கூறியுள்ளேன். ஆனால் பல்வேறு காரணங்களால் என்னால் வர முடியவில்லை. இன்று வந்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன். உலக சமாதானத்திற்காக தெய்வீக பணியை செய்து வரும் ஒரே ஆதீனம் காமாட்சிபுரி ஆதீனம் தான். சமத்துவம், சமாதானம், சாதி, மதம் கடந்து மக்கள் நலனுக்காக காமாட்சிபுரி ஆதீனம் வாழ்ந்து வருகிறார்.

ஜெயலலிதாவிற்கு தனி பாசம் உண்டு

உலக சக்திகளை ஒரே இடத்தில் உருவாக்கி அனைத்து பக்தர்கள் மற்றும் மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கி வருகிறார். இதனை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சியில் வந்து உங்களை சந்தித்தது என்னுடைய பாக்கியம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இந்த ஆதீனத்தின் மீது பற்றும், பாசமும் உண்டு. இதேபோல் பாரதப் பிரதமரும் காமாட்சிபுரி ஆதீனம் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதாக தெரிவித்தார்.

விருது வழங்கி கவுரவிப்பு

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலக சமாதான விருது வழங்கப்பட்டது. பின்னர் கோயில் சீடர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். ஆதீனம் என்பது சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், மக்களிடையே பரப்பும் வகையிலும் உருவாக்கப்பட்ட மடங்களே ஆகும்.

செல்வாக்கு மிகுந்த ஆதீனம்

இதன் தலைவர்கள் ஆதீன கர்த்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டவை புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. இவை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. ஆதீன கர்த்தர்களுடன் நெருங்கி பழகிய கட்சி தலைவர்கள் பலர் இருக்கின்றனர்.

அவர்களிடம் ஆசி பெறும் போது அரசியல் ரீதியாக பல காரியங்களை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இந்நிலையில் உட்கட்சி பூசலில் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு காமாட்சிபுரி ஆதினத்தின் ஆசிர்வாதம் திருப்புமுனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.