மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்தவர் நெருஞ்சியம்மாள். தொழிலாளியான இவரது கூரை வீட்டில் இலவச மின் இணைப்பு வழங்பபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொங்கபட்டி பகுதியில் ஆய்வு செய்த மின் மதிப்பீட்டு அலுவலர்கள் நெருஞ்சியம்மாளின் வீட்டையும் ஆய்வு செய்து வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களை பயன்படுத்தி வருவதாக கூறி சுமார் 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
இதனைக் கண்டு அதிர்சியடைந்த நெருஞ்சியம்மாள் வீட்டில் இருந்த பொருட்கள் தனது மகளுக்கு சீதனமாக கொடுத்த பொருட்கள் அவற்றை பயன்படுத்தவில்லை என மின் வாரிய அலுவலகத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று மின்வாரிய உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து அபராத தொகையை குறைத்து 3 ஆயிரம் அபராதமாக செலுத்த சொல்லியுள்ளனர். இந்த 3 ஆயிரத்தையும் செலுத்த முடியாத நிலையில் தவித்து வரும் நெருஞ்சியம்மாள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் மதிப்பீட்டு அலுவலர்களை கண்காணிப்பு செய்து ஏழை எளிய மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.