
ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி போனது
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண கிருஷ்ண இயக்கத்தில் உருவான படம் அகிலன். இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் காரணமாக அகிலன் படத்தை கிறிஸ்துமஸ்க்கு தள்ளி வைத்தார்கள். ஆனால் தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததாக சொல்லி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகிலன் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்பட பல நடித்துள்ளார்கள். மேலும், இந்த அகிலன் படத்திற்கு பிறகு அகமது இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து இறைவன் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கும் சைரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜெயம் ரவி.