தகாத உறவு, லிவிங் டூகெதர் கலாசாரத்தை ஒழிக்க வருகிறது புதிய சட்டம்!

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, சுற்றுலா மற்றும் தொழில் முதலீட்டிற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு திருமண உறவை தாண்டிய உடலுறவு, பாலியல் வன்கொடுமைகள், லிவ்விங் டூகேதர், கே, லெஸ்பியன் என இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை அறிந்து ஆட்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபோன்ற சமூக அவலங்களை களையும் நோக்கில், 2019 ஆம் ஆண்டு திருமண உறவைத் தாண்டிய உடலுறவுக்கு தடை விதிக்கும் சட்டம் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அதன் காரணமாகபோது இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

உலக சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கான இடமாக அறியப்படும் இந்தோனேசியாவில் இந்தப் புதிய சட்டம் ஏற்படுத்த இருக்கும் பாதிப்புகள் குறித்து பல்வேறு வணிக துறையினர் கவலை தெரிவித்திருந்தனர்.

வலுக்கும் ஹிஜாப் போரட்டம்..ஈரான் கலாச்சார காவலர்கள் அகற்றம்.!

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது வணிகத் துறையில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் எனவும், இந்தோனேசியாவில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர்களை மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்றும் இந்தோனேசியா முதலாளிகள் சங்கம் அப்போது கவலை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கிட்டதட்ட மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு, தற்போது இந்த சட்டம இந்தோனேசியாவில் வெகு சீக்கிரம் அமல்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த சட்டத்தின்படி,, மணமானவர்கள் திருமண பந்தத்தை மீறி பிறருடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அதுகுறி்த்து அவரது கணவர் அல்லது மனைவி உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை சிறை்த் தண்டனை விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 4 பேருக்கு மரண தண்டனை; ஈரான் அதிரடி.!

இதேபோல், திருமணமாகதவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அதுகுறித்து அவர்களின் பெற்றோர் காரளிக்கும் உரிமையை இந்த சட்டம் அளிக்கிறது. அத்துடன் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இணைந்து ஒன்றாக வாழ்வதையும் (Living Together) இந்தச் சட்டம் தடை செய்கிறது. மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தோனேசிய குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்படியாக இச்சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

பாலியல் வன்கொடுமை மற்றும் திருமணத்தை மீறய உறவுகளை தடுக்கும் கடுமையான சட்டங்கள், இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. அப்பகுதிகளில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவோருக்கு, குற்றத்தை பொறுத்து பொது இடங்களில் வைத்து போலீசாரே கசையடி வழங்குவார்கள் என்பதும், இதில் ஆண், பெண் பாலின பாகுபாடோ, வயது, மத பேதமோ கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.