ராஜஸ்தானில் தலைமைக் காவலரை தாக்கிய பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணேந்திர கௌர், பாஜகவின் முன்னாள் எம்.பி. ஆவர். இவர் அகாத் திராஹாவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது காரை நடுரோட்டில் நிறுத்தியிருந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் கஜ்ராஜ் சிங், காரை எடுத்து செல்லும்படி கிருஷ்ணேந்திர கௌரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாஜக முன்னாள் எம்.பி கிருஷ்ணேந்திர கௌர், தலைமைக் காவலரை தகாத வார்த்தையால் திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், பாஜக முன்னாள் எம்.பி. மீது பாதுகாப்பு அதிகாரிகளை தடுத்ததாகவும், தலைமைக் காவலரை தாக்கியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in