பெருந்துறை சிப்காட் அருகே குளத்தை மாசுபடுத்திய ஆலைக்கழிவுகள்: கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஆலைக்கழிவுகளால் குளம் மாசடைந்ததது குறித்து குளத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. பெருந்துறை பகுதியில் கடந்த வாரம் கனமழையின் போது சிப்காட் தொழில்மையத்தில் உள்ள ஆலை ஒன்றிலிருந்து வெளியேறிய கழிவுநீர் மழைநீருடன் கலந்தது. இதனால் சிப்காட்டை ஒட்டிய செங்குளம் கிராமத்தில் உள்ள நான்கரை ஏக்கர் பரப்பளவிலான குளம் மாசடைந்ததோடு சுற்றியுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன.

தண்ணீரின் மீது எண்ணெய் படலமும், நிலத்தில் திடக்கழிவுகளும் படிந்து சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தியது. ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள் ஆலையின் மின் இணைப்பை துண்டித்து சீல் வைத்தனர். இந்த நிலையில் குளத்தில் கலந்துள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகளுடன் கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். பையோலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் என்ற இயற்கை முறையில் ரசாயனங்கள் அகற்றப்படுகிறன.

மேலும் தண்ணீரின் மீது படிந்த எண்ணெய்படலத்தை வைக்கோல் சிப்காட்டன் படுக்கைகள் அமைத்தும் மரத்தூள் மூலமாகவும் பிரித்து அகற்றப்படுகிறது. இதுவரை 30 பேரல்களில் ரசாயனங்கள் வெளியேற்றப்பட்டிருப்பதால் சிவப்பு நிறமாக இருந்த நீரின் நிறம் மாறியுள்ளது. ரசாயன கழிவுகளை பாதுகாப்பன முறையில் அகற்ற நடவடிக்கை எடுத்ததற்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.