பொத்த அப்பாவை இன்சல்ட் செய்த கவுதம் கார்த்திக்…அப்செட்டில் ராசிக்காரர்கள்

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி, பின்னர் அதை கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

அதேபோல், இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைத் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கார்த்திக்கிற்கு அவரது முதல் மனைவி ராகினி மூலம் கவுதம், கைன் என இரு மகன்களும், இரண்டாவது மனைவி ரதி மூலம் தீரன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

 

மஞ்சிமா மோகனுடன் திருமணம்
இந்நிலையில் மூத்த மகனான கவுதம் கார்த்திக் கடந்த 28ஆம் தேதி நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மறுபுறம் நவரச நாயகனின் மகன் கவுதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். தொடர்ந்து, வை ராஜா வை, இந்திரஜித், ரங்கூன், இவன் தந்திரன் தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமா மோகனுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது, இதையடுத்து மூன்று ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடிகள், கடந்த 28 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இதனிடையே தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி இந்த திருமணத்தில் கவுதம் கார்த்திக் தனது தந்தை கார்த்திக்கை இன்சல்ட் செய்துள்ளார். அதன்படி இந்த திருமணத்தில் தனது திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து விமரிசையாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தாராம் கார்த்திக். ஆனால் கவுதம் கார்த்திக் தனது திருமணத்திற்கு வெறும் 250 அழைப்பிதழ்களை மட்டுமே அடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்திக்கிற்கு ஒரே ஒரு அழைப்பிதழைதான் கொடுத்தாராம். இந்த காரணத்தால் தான் நடிகர் கார்த்திக் அப்செட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.