
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 க்கான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருப்பதாக WHO தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 29,000 எம் பாக்ஸ் தொற்று உறுவானதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சுகாதார அவசரநிலை தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி-7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா அரசு இணைந்து ரஷ்யக் கடல்வழி கச்சா எண்ணெய் மீது ஒரு பாரெல்லுக்கு $60 விலையை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தன.

நியூயார்க் மேயர் அந்நாட்டின் எலித் தொகையை குறைக்க `எலி பிடிக்க ஆட்கள் தேவை’ என்று அறிவித்து ஆண்டுக்கு $170,000 சம்பளமாக அறிவித்துள்ளார்.

இத்தாலியின் கத்தோலிக்க திருச்சபை, கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்வுகளைக் குறிக்கும் வகையில், கைக்குலுக்கல்களை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

ஆப்கனின் காபூலில் உள்ள பாகிஸ்தான் எம்பஸி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

17-ம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்புமிக்க கிரீடம் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு மாற்றியமைக்கப்பட உள்ளது.