சென்னை: சென்னையில் பல்வேறு வாழ்க்கை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மதிப்பெண்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய நகரங்களின் வாழ்க்கை வசதிக் குறியீட்டை (Ease of Living Index) மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் கருத்துகளுக்கு 30 சதவீத மதிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது,
https://eol2022.org/CitizenFeedback%2c என்ற இணையதளத்தில் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதில் போக்குவரத்து வசதி, வீட்டு வசதி, மின்சார வசதி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, காற்று மாசு, பாதுகாப்பான நகரம், வாழ்வதற்கான செலவு உள்ளிட்டவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள இது தொடர்பான பதிவை அதிகம் பகிருபவருக்கு ரூ.5000 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.