தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் களமிறங்குகிறார் வடிவேலு. அந்தவகையில், தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வடிவேலுவிடமிருந்து வாங்கிய சுராஜ் வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் அப்பத்தா மற்றும் பணக்காரன் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகின. இதில் அப்பத்தா பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கடந்த ஒன்றாம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகரக்ளின் வரவேற்பை பெற்றது.
#NaaiSekarReturns promotions happening in full swing! #NaaiSekarReturnsOnDec9 at the cinemas near you!
Vaigai Puyal #Vadivelu @Director_Suraaj @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran @proyuvraaj @teamaimpr pic.twitter.com/748JccMruz
— Lyca Productions (@LycaProductions) December 2, 2022
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட வடிவேலு பேசுகையில், “என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அந்தக் கதையில் நான் நடிக்கமாட்டேன். எனவே அந்த இயக்குநர்களின் கதையில் நான் நடிக்கவில்லை என்பதற்காக சிலர் வெளியே சென்று நான் திமிர் பிடித்தவன் என்ற வதந்திகளை பரப்பிவருகின்றனர். என் நகைச்சுவையை பார்த்து ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. ஆனால் சிலர் பொறாமையில் இவ்வாறு பேசி வருகின்றனர்” என்றார்.