'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்..

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் 'வணங்கான்' திரைப்படம் உருவாகி வந்தது.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இயக்குனர் பாலா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பது என் கடமையாக இருக்கிறது.

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. 'நந்தா'-வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்'-ல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும் என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.