வலுக்கும் ஹிஜாப் போரட்டம்..ஈரான் கலாச்சார காவலர்கள் அகற்றம்.!

ஈரானில் அமெரிக்க ராணுவம் படையெடுப்பைத் தொடர்ந்து 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்கவும், ஈரானின் கலாச்சாரம் மற்றும் ஹிஜாப் குறித்த ஒழுங்முறைகளை மேற்கொள்ளவும் ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற அறநெறி சிறப்பு காவல் பிரிவு கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அன்று முதல் இஸ்லாமிய சட்டங்களை மீறுவோர்கள் மிது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது கடுமையான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இந்த அறநெறி சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது. உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெண்கள், ஹிஜாப் அணிவது பெண் அடிமைத் தனத்தின் குறியீடு என்று போராட்டங்களில் குதித்தனர். ஈரானில் நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து நீடித்து வருகிறது.

வலதுசாரி சிந்தனையுள்ள மத அடிப்படைவாதிகளின் கொள்கைகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். இறைத்தூதர் நபிகள் கூறிய உன்னத ஆன்மிகம் இப்படி கட்டாயப்படுத்தவில்லை என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப்பை கழட்டி எறிந்த பெண்கள், இது தங்களின் சுதந்திரம் என கூறி போராடி வருகின்றனர். பெண்களின் தொடர் போராட்டத்தால் மத அடிப்படைவாதிகல் கலக்கத்தில் உள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழி கண்காட்சி இன்று தொடங்கி உள்ளது

ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் கூறும்போது, “ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறந்த பெண்; இயேசு சொன்னதை செய்ததாக விளக்கம்.!

இந்தநிலையில் பெண்கள் போரட்டத்தை கட்டுப்படுத்த முடியாத, கலாச்சார காவலர்களான அறநெறி காவல்பிரிவு அகற்றப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மாண்டசெரி தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்க முடியாததல் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அறநெறி போலீசாருக்கு நீதித்துறைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.