டெஹ்ரான் : இஸ்ரேலுக்காக, ஈரானில் உளவு பார்த்த நான்கு உளவாளிகள் ஈரானில் நேற்று துாக்கிலிடப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தங்கள் உளவு பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான் அரசை உளவு பார்ப்பதாக, ஏழு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இஸ்ரேலின், ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக ஈரானில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், சில நபர்களை கடத்தி அவர்களை துன்புறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு, ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் பணம் வாயிலாக இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைதான ஏழு பேரில், நான்கு பேருக்கு ஈரான் ராணுவம் நேற்று துாக்கு தண்டனையை நிறைவேற்றியது. மீதமுள்ள மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement