வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம் என பெயர் எடுத்த ஜேர்மன் நகரம்


வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம் என பெயர் எடுத்துள்ளது ஜேர்மன் நகரம் ஒன்று.

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் பட்டியலில் இடம்

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் பட்டியலில் ஜேர்மன் நகரமான ஃப்ராங்பர்ட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

InterNations என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வெளிநாட்டவர்கள் வாழும் நகரங்களை தரவரிசைப்படுத்தியதில், 50 நகரங்கள் கொண்ட பட்டியலில் ஃப்ராங்பர்ட்டுக்கு 49ஆவது இடம் கிடைத்துள்ளது. அதாவது மோசமான நாடுகள் பட்டியலில் ஃப்ராங்பர்ட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது எனலாம்.

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம் என பெயர் எடுத்த ஜேர்மன் நகரம் | A German City Known As The Worst City

Photo by Sanjay B / Unsplash

காரணம் என்ன?

நிர்வாக சேவைகளில் திருப்தியின்மை

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் ஃப்ராங்பர்ட் நகரின் நிர்வாக சேவைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்கள்.

மிக அதிக விலைவாசி

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வீட்டு வாடகை மிக அதிகம் என்று கூறியுள்ளார்கள்.

பாதிக்கும் மேலானவர்கள் விலைவாசி மிக அதிகம் என்று கூறியுள்ளார்கள்.
 

நண்பர்கள் கிடைப்பது கடினம்

ஆய்வில் பங்கேற்ற மற்ற நகரங்களைப்போலவே, ஃப்ராங்பர்ட்டிலும் நண்பர்கள் கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார்கள் ஆய்வில் பங்கேற்ற 55 சதவிகிதத்தினர்.

குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னெவென்றால், மற்றொரு உள்ளூர் ஆய்வில் பலர் வித்தியாசமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள். அதாவது, ஃப்ராங்பர்ட் குறித்து நல்ல கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள் ஆய்வில் பங்கேற்றவர்கள்.
 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.