அடையாறு மெட்ரோ: அடுத்த ஆண்டு துவங்கும் சுரங்கம் தோண்டும் பணி

மெட்ரோ 2 ம் கட்ட பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 ஆயிரத்து கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் முதல்கட்டத்தை தொடர்ந்து, தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. வரை 3-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5-வது வழிப்பாதை உட்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
image
இதற்காக பசுமை வழிச்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க ரயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. அதே போல் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ள நிலையில் இதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (tunnel Boring machine) கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பொருத்தும் பணி நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் முதற்கட்டமாக மாதவரத்தில் சுரங்கம் தோன்றும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.