பெங்களூரு, ‘ஓலா’ மின்சார ஸ்கூட்டர் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் வகையில், 14 புதிய விற்பனை மையங்களை இந்தியாவில் திறந்துள்ளது.
தற்போது, நாடு முழுதும் 50க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள், 200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட சலுகைகள், டிசம்பர் 31ம் தேதி வரை தொடரும் என, தெரிவித்துள்ளது. மேலும் ‘ஓலா எஸ் 1 புரோ’ ஸ்கூட்டரை, 10 ஆயிரம் ரூபாய் சலுகையில், ஏழே நாட்களுக்குள்ளாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement