குஜராத் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்த முஸ்லிம்கள்… காரணம் இதுதான்!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தம் 62.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இது கடந்த 2017 குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட லாக்குபதிவை விட கி்ட்டதட்ட 4 சதவீதம் குறைவு.

தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவது ஆளுங்கட்சி சாதகமா, எதிர்கட்சிக்கு பாதகமா? அல்லது குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கி உள்ள ஆம் ஆத்மிக்கு பயனா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

அத்துடன் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவை விட இன்று நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட தேர்தலில் அதிக அளவு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பவ்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பார்ப்புக்கு நேர்மாறான ஓர் நிகழ்வு குஜராத் மாநிலம் கேடா நகராட்சிக்கு உட்பட்ட ஓர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தினர் அதிகம் உள்ள இந்த கிராமத்தில், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. மாறாக, தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக அலர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கர்பா நடன நிகழ்ச்சியில் கல்வீச்ச சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமானவர்களை தண்டிக்காமல், ஆர்வ மிகுதியில் நடனத்தை ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர்.

அத்துடன் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடைபிடிக்கப்படும் தண்டனை முறையை போல, அவர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் சாட்டையடியும் கொடுத்தனர். போலீசாரின் இந்த அத்துமீறலை கண்டிக்கும் விதமாகவும், அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் இன்றைய தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத், காந்தி நகர், வதோதரா உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு உட்பட மொத்தம் 93 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஹர்திக் படேல், பிரதமர் மோடியின் தாயார், எதிர்க்கட்சித் தலைவர் சுக்ரம் ரத்வா, ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுடன் கத்வி, குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர். மாலை 5 மணியுடன், இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராட் தொகுதியில அதிகபட்சமாக 25.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹலோல் தொகுதியில் மிகக் குறைந்த அளவாக 12.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக, ஆட்சி கட்டிலில் உள்ள பாஜக இந்த முறையும் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.