சிதம்பரம் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட செவிலியர் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகள் 15 பேர் வாந்தி மயக்கம். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு தரமில்லை என புகாரளிக்க நிர்வாக அலுவலகம் முன்பு மாணவிகள் திரண்டதால் பரபரப்பு எற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் செவிலியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி சமீபத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்ப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு செவிலியர் கல்லூரி மாணவிகள் தங்கி உள்ள விடுதியில் மாணவிகள் வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர்.
image
இந்நிலையில், இன்று காலை அதில் சுமார் 15 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 15 பேரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உணவு சரியில்லாததால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், விடுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலை உள்ளதால் விஷ ஜந்துக்கள் வருவதாகவும் தெரிவித்த மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து விடுதி மற்றும் உணவின் தரம் குறித்து புகார் அளிக்க வந்தனர்.
image
இதையடுத்து அவர்களை கல்லூரி முதல்வர் சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.