சொந்த மகளை திருமணம் செய்த மத போதகர்… மொத்தம் 20 மனைவிகள் – அதிர்ந்த FBI

அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் பல தாரமணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தனது சொந்த மகள் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

FBI ஆவணங்களின்படி, 46 வயதான சாமுவேல் ராப்பிலி பேட்மேன், 15 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை திருமணம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Fundamentalist Church of Jesus Christ of Latter-Day Saints (FLDS) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பலதார மணம் கொண்ட ஒரு குழுவின் போதகராக சாமுவே இருந்துள்ளார். 2019இல் இந்த சிறிய குழுவை பின்பற்றுபவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அவர் சிறுமியான தனது சொந்த மகளையே திருமணம் செய்துகொண்டுள்ளார். 46 வயதான அவர் 20 பெண்களை மணந்துள்ளார் என்று FBI ஆவணங்கள் கூறுகின்றன. அவர்களில் பலர் மைனர்கள் என்றும் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், FBI அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பின், அவரை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்துள்ளனர். 

சாமுவேல் மீதான சந்தேகம் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் இருவரைக் கொண்ட அவரது கார் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் மாநில எல்லையில் எதர்ச்சையாக சோதனை செய்யப்பட்டது. அவர் மாகாண எல்லைகள் வழியாக சிறுமிகளை மற்றொரு மாகாணத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, முதன்முறையாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

அப்போது அவர் கைது செய்யப்பட்டு மூன்று சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டார். இருப்பினும், சில நாள்களிலேயே பிணையில் வெளியே வந்தார். 

அதன்பின்னர்தான், அவரின் வீட்டில் FBI சோதனை மேற்கொண்டது. அவரும் வேறு சிலரும் அரிசோனா, உட்டா, நெவாடா மற்றும் நெப்ராஸ்கா இடையே சிறார்களை கடத்திச் சென்றதாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக FBI ஆவணங்கள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.