தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டியதற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது