திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார்-லாரி நேருக்கு நேர் மோதிய கொடூர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருடைய உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டடுள்ளனர். அப்போது காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை 6 மணி அளவில் திடீரென எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி கொடூர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விசுவநாதன் மற்றும் மணி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமணன் மற்றும் உமாவதி உள்ளிட்டோரை அங்கிருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர்கள் செல்லும் வழியிலேயே ரமணன் உயிரிழந்தார். தற்போது உமாவதி கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்