குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்