வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் அதிபர் விளாடிமிர் புடின், 70, தவறி விழுந்ததாகவும், அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்து, கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக முதலில் தகவல் பரவியது. இதை, ரஷ்ய அதிபர் மாளிகை முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில், கரீபிய தீவு நாடான கியூபா அதிபர் மிகைல் டியாஸ் கனேலை, ரஷ்ய அதிபர் புடின் கடந்த மாதம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புடினின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும், அவை ஊதா நிறத்தில் காணப்பட்டதாகவும், பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், அவர் நடையில் அசவுகரிய தன்மை வெளிப்பட்டதாகவும் கூறப்பட்டது.
![]() |
இந்நிலையில், சமீபத்தில் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டுகளில் இறங்கி வருகையில், புடின் தவறி விழுந்ததாகவும், அப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி மலம் வெளியேறியதாகவும் சில ஊடகங்களில் செய்தி பரவியது.
புற்றுநோய் காரணமாக, அவரது வயிறு மற்றும் குடல் ஆகியவை ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை காரணமாகவே அவரது கட்டுப்பாட்டை மீறி மலம் வெளியேறியது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிபர் புடினின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உளவாளி ஒருவர் தகவல் வெளியிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement