ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பாலக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 32 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி தலைமை ஆசிரியை கீதா கழிவறை பயிலும் பட்டியலின மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாணவ மாணவியின் பெற்றோர்கள் பெருந்துறை போலீசார் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பவானி, சென்னிமலை, பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியது , ரசாயன பொருட்களை சிறுவர்களை கொண்டு கவனக்குறைவாக கையாள செய்வது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தலைமறைவாக இருந்த கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் தலைமை ஆசிரியை கீதா ராணியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.