பத்ம பூஷன் விருது பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது முதிர்வால் காலமானார்!

பாரிஸ்,

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர்( 91) வயது முதிர்வால் நேற்று காலமானார்.

டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய ஆறு புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகியுள்ளன. அவர்கள் இயற்றிய “இஸ் பாரிஸ் பர்னிங்?” புத்தகம் உலகப்புகழ் பெற்றது.

கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி, 1985இல் வெளியான ‘சிட்டி ஆப் ஜாய்’ என்ற நாவல் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாவலை தழுவி ஒரு திரைப்படம் 1992 இல் வெளியானது.

“சிட்டி ஆப் ஜாய்” நாவல் மூலம் தனக்கு கிடைத்த ராயல்டிகளில் பெரும்பகுதியை அவர் இந்தியாவில் பல்வேறு மனிதாபிமான திட்டங்களுக்காக நன்கொடையாக வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ஆம் ஆண்டு குடியரசு தினத்தில், இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருது லாபியருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.